திருச்சிராப்பள்ளி, மே 10- கொரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு போ ராட்டம் நடத்த சிஐடியு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து திருச்சி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரியத்தில் பல்லாயிரகணக்கான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு, ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு ரூ 1000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு 3-வது முறை யாக அறிவித்தும், 45 நாட்களை கடந்தும் சில ஆயிரம் தொழிலாளர்களுக்கு இதுநாள் வரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை. இதே போன்று தொழிலாளர் நலவாரியம் வெளியிட்ட வாட்ஸ்அப் எண்ணில் உரிய சான்றிதழ்களை அனுப்பிய மற்றும் நலவாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்த தொழிலாளர்களில் சில ஆயிரம் பேருக்கு நிவாரணத் தொகை வழங்கப் படாமல் உள்ளது. மேலும் நிவாரண பொருட்கள் பெற்றவர்கள் கூட நிவாரண தொகை கிடைக்கா மல் அவதிப்படுகின்றனர். ஊரடங்கு காலத்தில் வருமானத்திற்கு வழி யின்றி தவிக்கும் அமைப்புசாரா தொழிலாளர்க ளின் வாழ்க்கை ஓட்டத்திற்கு பயன்படும் என்ற நோக்கத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் நல வாரிய அலுவலகத்தின் மெத்த னப் போக்கால், அரசின் நோக்கம் நிறைவேறா மல் தொழிலாளர்கள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிற்சங்கத்தின் சார்பாக பேசுவதற்கு கூட தொழிலாளர் நல வாரிய அலுவலர்கள் மறுக்கிறார்கள். எனவே திருச்சி மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும்; உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். புதுப்பித்தல் செய்யாமல் விட்ட தொழிலாளர்களுக்கும் நிவார ணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கிட, சென்னை போன்று இங்கும் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, இதுநாள் வரை நிவாரண நிதி பெறாத தொழிலாளர்களை ஒன்று திரட்டி மன்னார்புரம் செங்குளம் காலனியில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் போராட்டம் நடத்து என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சி அரசு தலைமை மருத்துவ மனையில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் சிறப்பு ஊதியம் வழங்க அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென சிஐடியு மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கேட்டுக்கொள்கி றோம் என அவர் அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.