புதுச்சேரி, மார்ச்.14- அமைப்புசாரா தொழிலாளர்க ளின் இறப்பு நிதியை உடனே வழங்க வேண்டும் என்றுபுதுச்சேரி அரசை சிஐடியு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு புதுச்சேரி பிரதேச குழு கூட்டம் பிரதேச தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் பொன்முடி, பிரதேச செயலாளர் சீனிவாசன், பொருளாளர் என்.பிரபுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் சாலை மறியல், முழு கதவடைப்புகள் மூலம் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. சேதராப்பட்டு மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் ஒரு சில தொழிற்சாலைகளின் நிர்வாகம் மிக மோசமான தொழிலாளர் விரோத கொள்கைகளை கடைபிடித்து வரு கிறது. குறிப்பாக சோலிபிசியோ, ஹிந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் யூ கால் ஆகிய ஆலை களின் செயல்பாடுகள் தொழி லாளர் துறைக்கும் புதுச்சேரி அரசுக்கும் எதிராக ஏதேச்சதி காரகமாக உள்ளதால் அந்த தொழிற்சாலைகள் மீது சட்டப்படி யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அமைப்புசாரா நல சங்கத்தை நல வாரியமாக மாற்ற அரசு தேவையான நடவடிக்கை களை எடுக்காமல் தாமதிப்பது அந்த தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், உறுப்பினர் பதிவு நடத்தாமல் இருக்கிறது. மரணமடைந்த அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படமால் நிலுவையில் வைத்துள்ளது. இந்த பிரச்சனையில் அரசு உடனடி யாக தலையிட வேண்டும் கட்டுமான நல வாரியத்திற்கு உறுப்பினர்களை தேர்வு செய்து முறைப்படுத்த வேண்டும், அமைப்புசாரா நல சங்கத்தை நல வாரியமாக மாற்ற வேண்டும், மரணமடைந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ஈமச்சடங்கு நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.