states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள எஸ்எப்ஐ மாநிலத் தலைவர் எம்.சிவபிரசாத்

கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களின் பாத பூஜை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது ; நாகரிக சமூகத்திற்கு பொருந்தாத செயல். கேரளாவில் கல்வித்துறை முற்போக்கான மதச்சார்பற்ற ஜனநாயகக் கருத்துக்களை நிலைநிறுத்தி உலகத் தரத்தை நோக்கி முன்னேறி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

ஆசாத் சமாஜ் தலைவர் சந்திரசேகர் ஆசாத்

உத்தரப்பிரதேச பாஜக அரசு கன்வர் யாத்திரை மாதத்தில் முஸ்லிம்கள் தெருக்களில் நமாஸ் தொழுவதைத் தடுக்கிறது. அதே போல சாதி, மத அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறது. இனிமேல் பாகுபாடு காட்ட முடியாது. அதுதான் பாஜகவிற்கு நல்லது. 

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகாரில் தற்போது இருக்கும் அதே வாக்காளர்கள் தான் மோடியை 3 முறை பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இப்போது அந்த பட்டியல் அவருக்கு ‘போலி’ ஆகிவிட்டது. இதற்கு என்ன சொல்ல முடியும்.

உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல்

தேர்தல் ஆணையம் எப்போதும் மோடி அரசாங்கத்தின் கைகளில் ஒரு “பொம்மையாக” இருந்து வருகிறது. பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம், பெரும்பான்மை அரசாங்கங்கள் ஆட்சியில் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. அதே போல இது அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் மிக முக்கியமானது ஆகும்.