கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
பிரபல திரைக்கலைஞர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வயது (83) உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக் கிழமை காலை கால மானார். 1978-ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் அறி முகமான கோட்டா சீனிவாச ராவ், ஆந் திர மாநிலத்தைச் சேர்ந்தவர். நடிகர், பாடகர், டப்பிங் கலை ஞர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித் துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ‘சாமி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர், திருப்பாச்சி, சகுனி, ‘கோ’ போன்ற பல்வேறு படங்களில் மிரட்டலாக நடித்திருப்பார். 1999 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேச சட்டப்பேர வைவும் உறுப்பினராக இருந்துள்ளார். இந்திய சினிமாவுக்கு கோட்டா சீனிவாச ராவ் அளித்த பங்கிற்காக 2015-ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டி ருந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஞாயிற் றுக்கிழமையன்று காலமானார்.