பீகாரில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கூட்டம்
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைமையில் களமிறங்குகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள், விகாசில் இன்ஸான் உள்ளிட்ட கட்சிகளும் “இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பாட்னாவில் உள்ள ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வியின் இல்லத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் வியூகம் தொடர்பான விவாதம் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.