tamilnadu

img

திருச்சி வார்டு பகுதிகளில் பொதுக் குழாய் அமைத்து குடிநீர் வழங்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூலை 12- திருச்சி மாநகராட்சி 39, 40, 41-வது வார்டுகளில் காவிரி குடிநீர் பொதுக் குழாய் இல்லாத பகுதிகளில் பொதுக் குழாய் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி, புதிய மின்கம்பங்களை அமைத்து, எரியாத மின் விளக்குகளை மாற்ற வேண்டும்.  திருச்சி நகரின் கூவம் ஆறாக மாறும் கோரை ஆற்றில் கலக்கும் சாக்கடை நீரை தடுத்து தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் வியாழனன்று மாலை எடமலைப்பட்டிபுதூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் லெனின் தலைமை வகித்தார். சேகர், சின்னையன், சேட், சிவா, நிர்மலா, கணேசன், தங்கராஜ், லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், பகுதி செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் பேசினர். லதா, சரஸ்வதி, சதாசிவம், ராஜேஸ்வரி, கல்யாணி, வனஜா, செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.