சின்னாளப்பட்டி 12. திண்டுக்கல் மாவட்ம் தேவ ரப்பன்பட்டி ஊராட்சிக்கு பாத்தி யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு களை அகற்ற.வேண்டும்.நான்கு தினங்களுக்கு ஒரு முறை சுத்த மான குடிநீர் வழங்க வேண்டும்.தேவரப்பன்பட்டி.நல்ல தண்ணீர் கிணற்றை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.குடிநீரில் உப்பு தண்ணீர் கலந்து வருவதை தவிர்க்க வேண்டும்.குடிநீர் தொட்டிகளை அரசு விதிமுறைப்படி 15 நாட்க ளுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.சௌடாம்பிகா நக ரில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.வினோ பாஜி நகர் மீனாட்சிபுரம் பகுதி களில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.சின்ன கவுண்டன்பட்டி அங்கன்வாடி மையத்தை பராம ரிப்பு செய்தும்கழிவு நீர் ஓடை அமைத்தும் குழந்தைகளின் சுகா தாரத்தை பாதுகாத்திட வேண்டும். சின்ன கவுண்டன்பட்டி நூலகத்தை திறந்திட வேண்டும்.காந்திபுரம் பகுதியில் குப்பைமேடுகளை அகற்ற வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேவரப் பன்பட்டி கிளை செயலாளர். ஆறு முகம் தலைமை தாங்கினார். ஒன்றி யக்குழு உறுப்பினர் மகாலெட்சுமி முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதானந்தம். ஒன்றிய செயலாளர் சூசைமேரி, சிஐடியு ஒன்றிய கன்வீனர் விகே. முருகன் ஆகியோர் பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி. நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.