districts

பாதிரியார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஏப் .4 கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகரை சேர்ந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது மாணவி ஒருவர் கொடுத்த  புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் 5  பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த விவகாரம் கன்னி யாகுமரி மாவட்டத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நீதிபதி தாயுமானவர் பெனடிக் ஆன்றோ வை 14  நாட்கள்  நீதிமன்ற காவ லில் வைக்க  உத்தர விட்டார். பின்பு பாதிரியார்  பாதுகாப்பு காரணமாக அங்கிருந்து பாளையங் கோட்டை  சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.  இந்த நிலையில் அவர்  மீதும் ஆபாச புகைப்ப டங்கள் மற்றும்  வீடியோக்களை சமூக வலை தளங்களில் பரப்பியவர் களையும் கைது செய்து  விரைவில் குற்ற பத்தி ரிக்கை தாக்கல் செய்யுமாறு  நாகர்கோவில் வேப்ப மூடு பூங்கா முன்பு செவ்வா யன்று  சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட செயலாளர் செல்லச்சாமி தலைமை தாங்கினார்.  முன்னாள் எம். பி. பெல்லார்மின் ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்து  பேசினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ், அண்ணாதுரை ஆகி யோர் பேசினர். ஆர்ப்பாட்டத் தில் மோகனன், உஷா  பாசி, புஷ்பதாஸ், ரகுபதி, மனோகர ஜஸ்டஸ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.