tamilnadu

img

தோழர் அசோக் படுகொலை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன்,15- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்தும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். முறையான நடவடிக்கை எடுத்திடாத காவல்துறையை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மணப்பாறை பெரியார் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் ஆவா.இளையராஜா தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை விளக்கி டிஒய்எப்ஐ புதுக்கோட்டை மாவட்ட தலைவரும், மாநில குழு உறுப்பினருமான  கருணா, திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் பாலு, புதுக்கோட்டை மாவட்ட குழு உறுப்பினர் அருண் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். சிபிஎம் வட்டச் செயலாளர் ராஜகோபால், வட்டச் செயலாளர் கண்ணன், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட பொருளாளர் சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்ட தலைவர் தங்கராஜ், பொருளாளர் இளையராஜா, மாவட்ட குழு உறுப்பினர் சங்கர்ராஜ், வட்ட துணை செயலாளர்கள் முருகேசன், மாசிலாமணி, விஜய், அறிவழகன், நித்தியானந்தன், எஸ்எப்ஐ ஒருங்கிணைப்பாளர் செல்வ நாகார்ஜுன், சூளியாபட்டிகிளை செயலாளர் வினோத் கலந்து கொண்டனர். இலால்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி ஒன்றிய செயலாளர் திலக் பிரபு, ex.மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகதீசன், மாவட்ட செயலாளர் நாகராஜ் ஆகியோர் பேசினர்.

மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூர் திருவெள்ளறை கடைவீதி ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர்சங்க மாவட்ட பொருளாளர் ஆனைமுத்து தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச்செயலாளர் ஜெ.சுப்ரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணை தலைவர் எஸ்.முருகேசன், மாதர்சங்க மாவட்ட தலைவர் பி.லிங்கராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன், சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி பூமாலை, மின் ஊழியர் அமைப்பின் திருச்சி நகர வட்ட செயலாளர் எஸ்.கே.செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமரேசன், சேகர், மனோகர் மற்றும் கிளை உறுப்பினர்கள் செல்லப்பெருமாள், ரெங்கநாதன், ராஜா, செல்லையா, முருகானந்தம் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க மாவட்டகுழு உறுப்பினர் பி.செல்வராஜ் நன்றி கூறினார்.

திருவாரூர் 
கட்சி சார்பில் திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் தலைமையேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கண்டன உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.சாமியப்பன், எம்.பி.கே.பாண்டியன், டி.முருகையன், ஒன்றிய நகர தலைவர்கள் மாதவன், ஜெயபால், கிருஷ்ணன், தர்மலிங்கம், பகவன்ராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  சாதி ஆதிக்க வெறியினருக்கு எதிராகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பலப்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

வலங்கைமான் 
கட்சி சார்பில் வலங்கைமான் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்ராதா  தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்சேகர் கண்டன உரையாற்றினார் மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன், வாலிபர் சங்க மாநில குழு மைதிலி. மாவட்ட பொருளாளர் இளங்கோவன். ஒன்றியச் செயலாளர் விஜய். தலைவர் ஜெயராஜ். மாணவர் சங்க மாவட்ட குழு ரகுராமன். தலைவர் ஸ்ரீராம், பொருளாளர் மணிகண்ட பிரபு கலந்து கொண்டனர். சிபிஎம் நகர செயலாளர் எஸ்.சாமிநாதன் போராட்டத்தை முடித்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் குளித்தலை காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.