tamilnadu

img

மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 3-    திருச்சி பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018, 2018-2019-ம் ஆண்டு படித்த 12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழக அர சின் இலவச மடிக்கணினி கேட்டு புத னன்று இந்திய மாணவர் சங்கம் தலை மையில் பள்ளி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டத் தலைவர் சேது பதி, மாவட்ட துணைத்தலைவர் அரு ணாச்சலம், மாவட்ட செயற்குழு உறுப் பினர் துளசி ஆகியோர் பேசினர். தகவலறிந்து வந்த காவல்துறை யினர் மற்றும் கல்வித்துறை அதிகாரி கள் மாணவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில், முன்னாள் மாணவர் களுக்கு ஒரு மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணை நகலை வழங்கி மடிக் கணினிகளை வழங்க உடனே நட வடிக்கை எடுக்கப்படும் என்றனர். இத னையடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.