tamilnadu

பேச்சுவார்த்தையில் உடன்பாடு மணல் மாட்டுவண்டி ரீச் தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 26- திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில்  கிளியநல்லூர், மாதவபெருமாள், தாளக்குடி,  கூகூர் ஆகிய பகுதிகளில் உள்ள மணல் மாட்டு  வண்டி குவாரிகளை உடனடியாக திறக்க வலி யுறுத்தி மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம்(சிஐடியு) சார்பில் திங்களன்று (ஜூலை 27) திருச்சி – புதுக்கோட்டை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்ப த்தோடு காந்திருப்பு போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர்  ராஜா, மணல் மாட்டு வண்டி சங்க சங்க மாவட்ட  செயலாளர் சேகர், சிஐடியு புறநகர் மாவட்ட  தலைவர் பன்னீர்செல்வம் உள்பட அரசு அதி காரிகள் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தையில், கொள்ளிடம் ஆற்று  பகுதிகளில் தாளக்குடி, கூகூர், மாதவப்பெ ருமாள் கோவில் மற்றும் கிளியநல்லூர் ஆகிய இடங்களில் மணல் மாட்டு வண்டி ரீச் திற ப்பது குறித்து முன்மொழிவுகள் தயார் செய்து  மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்கத்திற்கு அனுப்பி வைத்து 25 தினங்களுக்குள் மணல்  மாட்டு வண்டி ரீச் துவங்குவதற்கு நடவடிக்கை  மேற்கொள்வது. மேலும் மாவட்ட ஆட்சியரின்  வாயிலாக அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவு நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் எனவும் முடிவானது. இத னையடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலி கமாக கைவிடப்பட்டது.