tamilnadu

img

காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

புதுச்சேரி, ஆக. 27- அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க முதல்வர் உறுதி யளித்ததை தொடர்ந்து பெருந்திரள் காத்தி ருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. புதுச்சேரி அமைப்புசாரா தொழிலா ளர்கள் நலச் சங்கத்தை நலவாரியமாக மாற்ற  வேண்டும், கொரோனா பேரிடர் கால நிவா ரணமாக குடும்பத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும், ஆட்டோ, கார் வேன், உள்ளிட்ட சுற்றுலா வாடகை வாகனங்களுக்கான சாலை  வரி, வாகன புதுப்பித்தல் வரி, வங்கிகள் வழங்கிய வாகன கடன் உள்ளிட்டவை வசூ லிப்பதை ஓராண்டுக்கு தள்ளிவைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள ஏ.எஃப்.டி மைதானத்தில் சிஐடியு  பிரதேச செயலாளர் சீனிவாசன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு தலைவர் கே.முருகன் போராட் டத்தை துவக்கி வைத்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கொளஞ்சி யப்பன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் வாழ்த்திப் பேசினர். இதில் நிர்வாகிகள் பிரபுராஜ், மதிவாணன், ராஜ்குமார், கலியமூர்த்தி, ரவிச்சந்திரன், ஆவணிஅப்பன், மது, ரவிக்குமார், வடிவேல், வீரமணி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிஐ டியு தொழிற்சங்க தலைவர்களை முதல்வர்  நாராயணசாமி பிற்பகல் தனது அலுவ லகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது நலவாரியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும்  துறையின் அமைச்சர் கந்தசாமி சிகிச்சை யில் உள்ளார். எனவே வரும் திங்கட்கிழமை (ஆக. 31) அமைச்சர், அதிகாரிகள் முன்னி லையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு எடுக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுமாறும், மற்ற கோரிக்கைகள் குறித்தும் அன்றே பேசி  தீர்வு காணலாம் என்று முதல்வர் நாராயண சாமி தலைவர்களிடம் கூறினார். இதை யடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிக மாக தள்ளி வைக்கப்படுவதாகவும், அரசின்  முடிவை பொருத்து அடுத்தகட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர்.