திருச்சி, ஏப்.13-மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடாவை தடுக்க தேர் தல் ஆணையம் வாகன சோதனை, பேருந்து, ரயில், விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த தனியார் விமான பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 2 பெண் பயணிகள் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2,203 கிராம் தங்க செயின்களை கழுத்தில் அணிந்து அதனை துணியால் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.