tamilnadu

img

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ‘515’ கணேசனுக்கு புதிய வீடு

புதுக்கோட்டை, மே.14- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசிப்பவர் கணேசன். இவர் 515 என்ற எண் கொண்ட அம்பாசிடர் காரை கடந்த பல வருடங்களாக வைத்துள்ளார். இந்த காரை ஏழை, எளிய மக்களுக்கான சமூக சேவைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக மருத்துவமனைகளில் இறந்தவர்களின் சடலங்களையும், இதர இடங்களில் இறந்து கிடக்கும் பிணங்களையும் எவ்வித கட்டணமும் வாங்காமல் தனது சொந்த செலவில் ஏற்றிச் சென்று அடக்கம் செய்து உதவுவார்.இப்படியாக கடந்த 48 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான சடலங்களை அடக்கம் செய்ய உதவியுள்ளார். அதே போல, இரண்டாயிரத்திற்கும் அதிகமான கர்ப்பிணிகளையும் மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றுபிரசவத்திற்கு உதவி உள்ளார். மேலும்,சுனாமி, சென்னைப் பெருவெள்ளம், தானே புயல், ஒக்கிப் புயல் சமயங்களில்ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான தொகை மற்றும் பொருட்களை சேகரித்து உதவி உள்ளார். இவரது சேவையைப் பாராட்டி பெங்களூருரைச் சேர்ந்த பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. மேலும்பல்வேறு அமைப்புகள் இவரதுசேவையைப் பாராட்டி கவுரவித்துள் ளன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் கணேசனின் வீடும் கடுமையாக சேதமடைந் தது. வீட்டை இழந்து தவித்து வரும்இவரது நிலைமையை அறிந்த திரைப் பட நடிகர் லாரன்ஸ் ஆலங்குடிக்கு வந்து இவரை சந்தித்தார். மேலும், ரூ.10 லட்ச ரூபாய் மதிப்பில் தனது சொந்த செலவில் புதிய வீடு கட்டித் தருவதாக உத்தரவாதம் அளித்தார். அதன்படி ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை செவ்வாய்க்கிழமை நடிகர் லாரன்ஸ் திறந்து வைத்தார்.