லாகூர்
கொரோனா ஊரடங்கை பற்றி கண்டுகொள்ளாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க வருகிற 28-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டிற்கு செல்கிறது.
இந்த தொடரில் பங்கேற்க மொத்தம் 29 வீரர்கள் லாகூரில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இங்கிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக சம்பந்தமான அனைவர்க்கும் 2 முறை கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதாவது வரும் 22-ஆம் தேதி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று சோதனை நடத்தப்படுகிறது. அதன் பின் இங்கிலாந்து செல்லும் அனைவரும் 24-ஆம் தேதி லாகூர் நகரில் விமானத்திற்காக ஒன்றிணைவார்கள். அங்கு 2-வது முறையாக சோதனை நடத்தப்படும். சோதனை முடிவில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாட்டில் தற்பொழுது கொரோனா பரவல் படுவேகமாக உள்ள நிலையில், தற்பொழுது இந்த விளையாட்டு தொடர் தேவை தானா? என இருநாட்டு விளையாட்டு ஆர்வலர்கள் உட்பட பலர் முகம் சுளித்துள்ளனர்.