கொரோனாவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பெருந்தொற்று வருங்காலத்தில் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியது:
கொரோனா வைரஸை சமீபத்தில் சர்வதேச அவசர நிலையிலிருந்து நீக்கினோம். அதற்காக கொரோனா பாதிப்பால் எந்தவொரு ஆபத்தும் இல்லை. இனி இது எந்தவொரு சுகாதார அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று இல்லை. கொரோனாவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பெருந்தொற்று வருங்காலத்தில் உருவாகும்
அதனைக் கூட்டாக எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வெண்டும் எனக் கூறியதோடு கொரோனா பாதிப்பால் நமது இலக்குகளை அடையத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை விரைவில் அடைய வேண்டும் எனவும் கூறினார்