tamilnadu

img

நாகை வேட்பாளர் எம்.செல்வராஜூக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பு பயணம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.2- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.செல்வராஜ் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு செவ்வாயன்று காலை திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் ஆதிரெங்கத்திலிருந்து பிரச்சாரப் பயணம் துவங்கப்பட்டது. இந்த பிரச்சாரப் பயணமானது தலைக்காடு, கொருக்கை, கொக்காலடி, பாமணி, மணலி,ஆலத்தம்பாடி, கச்சனம், ஆண்டாங்கரை, பள்ளங்கோவில் வழியாக திருப்பத்தூரில் நிறைவடைந்தது. விழி நெடுவிலும் மக்கள் ஆரவாரத்தூடனும், பட்டாசுகள் முழங்க, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.மாவட்ட செயற்குழு உறுப்பினர்ள் சி.ஜோதிபாசு, கே.என்.முருகானந்தம், ஒன்றிய செயலாளர்கள் பி.இராமச்சந்திரன், டி.வி.காரல்மார்க்ஸ், சி.பி.ஐ சார்பில்மு.சட்டமன்ற உறுப்பினர் கே.உலகநாதன், ஆர்.ஞானமோகன், அ.பாஸ்கர், தி.மு.கசார்பில் சட்டமன்ற உறுப்பினர் ப.ஆடலரசன், ஏ.பிரகாஷ், எஸ்.சிவகுமார், ம.தி.மு.க கோவி.சேகர், விடுதலை சிறுத்தை சார்பில் மாவட்ட செயலாளர் வி.த.செல்வம், காங்கிரஸ் சார்பில் கோ.பாஸ்கர், மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தோழர்கள், திராவிட கழகதோழர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு மற்றும் ஒன்றிய, நகரக்குழு தோழர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 100 இருசக்கர வாகனங்களில் தோழர்கள் அணிவகுத்தனர்.