மன்னார்குடி, டிச.17- திருவாரூர் மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் சிறு மற்றும் குறு தொழில் ஒரு நாள் பயிற்சி முகாம் திருவாரூரில் நடந் தது. மாவட்ட வருவாய் அலு வலர் பொன்னம்மாள் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட இயக்கு னர் ஸ்ரீலேகா, மகளிருக்கான சிறு மற்றும் குறு தொழில் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் ரவிச்சந்திரன், தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார். இந்தியன் வங்கி திருவாரூர் துணை மண்டல மேலாளர் மு.செல்வநாயகம் சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சி க்கான வங்கி திட்டங்களை எடுத்துரைத்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எழிலரசன், திருவாரூர் சிறு மற்றும் குறு தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், தொழில் முனைவோர், தொண்டு நிறு வனங்கள், மகளிர் சுயஉத விக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட னர். முகாமிற்கான ஏற்பாடு களை மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் செய்தி ருந்தனர்.