tamilnadu

img

திருவாரூர் வருவாய்த்துறை அலுவலர் சங்க அமைப்பு தினம்

திருவாரூர், ஆக.3- தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்க  57 ஆம் ஆண்டு அமைப்பு  தினம் திருவாரூர் மாவ ட்டத்தில் கடைப்பிடிக்க ப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகிய வற்றில் சங்க கொடியேற்ற ப்பட்டது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழை வாயிலில் திங்கட்கிழமை யன்று நடைபெற்ற நிகழ்ச்சி யில் சங்க மாவட்ட தலைவர் எஸ்.மகேஷ் தலைமையில் செயலாளர் டி.எஸ்.அசோக்  முன்னிலையில் மாநிலப் பொ ருளாளர் வெ.சோமசுந்தரம் கொடியேற்றினார். கூட்டு றவு ஊழியர் சங்க மாநிலத்  தலைவர் எம்.சௌந்தர ராஜன் வாழ்த்துரை வழங்கி னார். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்  திரளானோர் கலந்து கொண்டனர்.