மன்னார்குடி, ஜூன் 20- படத்தில் நாம் காணும் பட்ட அரசமரம் மன்னார்குடி வட்டம், கூப்பாச்சிக்கோட்டை மெயின் ரோட்டில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. கடந்த கஜா புய லின்போது கிளைகள் முறிந்த மிகப் பெரிய அரசமரம் இது. கிளைகள் அகற்றப்பட்டு மர த்தின் அடிப்பகுதி இயந்தி ரத்தால் அறுக்கபட்ட நிலை யில் இப்போது அந்த மரம் ஆபத்தின் சின்னமாக அச்ச மூட்டும் நிலையில் நின்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் யு.எஸ். பொன் முடி கூறுகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூப்பா ச்சிக்கோட்டை ஊர்மன்ற தலைவர் மன்னார்குடியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் இம்ம ரத்தை அப்புறப்படுத்து வதற்கு கடிதம் கொடுத்து விட்டார். கஜா புயல் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி யும் மரம் மட்டும் அப்படியே நிற்கிறது. அடிப்ப குதி அறுக்கப்பட்ட மரம் கடு மையான வெயில் காரண மாக காய்ந்து போய் எந்த நே ரத்திலும் சாலையில் செல் வோர் அல்லது வாகனங்கள் மீது விழுந்து விபத்து நடப்ப தற்கு வாய்ப்பு இருக்கிறது. இது உடனே அப்புறப்ப டுத்தப்பட வேண்டும். குறி ப்பிட்ட காலத்திற்குள் நெடு ஞ்சாலைத்துறையாமல் அப்புறப்படுத்தப்படவில்லை யென்றால் கூப்பாச்சிக்கோ ட்டையில் உள்ள வாலிபர்கள் நூதன போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றார். அபாயமான நிலை யில் நின்று கொண்டிருக்கும் மரத்தை நெடுஞ்சாலைத்துறை அகற்றுமா?