tamilnadu

img

நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்

மன்னார்குடி, பிப்.22- திருவாரூர் மாவட்ட கிரா மங்களில் அனைத்து நேரடி  நெல் கொள்முதல் நிலைய ங்களிலும் நெல் குவியல்கள் மற்றும் நெல் மூட்டைகள் ஏராளமாக தேங்கியுள்ளன. அவ்வப்போது கொள்மு தல் செய்யப்படும் நெல் உட னுக்குடன் அப்புறப்படு த்தப்படாததால் வீணாகும் நிலை உருவாகி உள்ளது.  இதனை சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் வி.எஸ். கலியபெ ருமாள், மாவட்டக்குழு உறு ப்பினர் கே.கைலாசம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சோம ராஜமாணிக்கம், நகர செய லாளர் சி.டி. ஜோசப் உள்ளி ட்டோர் திருவாரூர் மாவட்ட த்தில் ரிஷியூர், கடம்பூர்,  நீடாமங்கலம் தேவங்குடி காளாச்சேரி, காணூர், ஒளி மதி உள்ளிட்ட கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலைய ங்களுக்குச் சென்று பார்வை யிட்டனர். அங்குள்ள குறைகள் போக்கப்பட்டால் விவசாயி களின் நெல்லை சிரமமின்றி யும் சேதாரமின்றியும் கொ ள்முதல் செய்ய முடியும். நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாக மும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.