districts

கொத்தங்குடி திறந்தவெளி சேமிப்பு மையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனையவில்லை தஞ்சை ஆட்சியர் விளக்கம்

கும்பகோணம், ஆக.26 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத் தில் உழவர் சந்தை கொத்தங்குடி திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையம் சேமிப்பு கிடங்கையும் முழை யூரில் உள்ள பெரியார் சமத்துவபுர வீடு களின் நிலை குறித்தும் தஞ்சை மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களி டம் கூறுகையில்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சை மண்டலம் மூலம், நடப்பு பருவத்தில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் மூலம் நெல்  கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகள்  மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங் களில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் கும்பகோணம் வட்டம் கொத்தங்குடி திறந்தவெளி நெல்  சேமிப்பு கிடங்கில் 6,933 மெட்ரிக் டன்  நெல் இருப்பு வைத்து பாதுகாக்கப் பட்டு வருகிறது.  மழையினால் நெல் மூட்டைகள்  சேதம் அடைந்து விட்டதாகவும், அவை  ஒழுங்காக பாதுகாக்கப்படவில்லை எனவும் ஊடகங்களில் செய்தி வெளி யானது. இதையடுத்து மேற்கொண்ட ஆய்வில், சமீபத்தில் பெய்த முதல் நாள்  மழையில் நெல் மூட்டைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அடுக்கி  வைக்கப்பட்டிருந்த 64 அட்டிகளில், ஒரு  அட்டி மட்டும் கல் சரிந்ததால் நெல் மூட்டைகள் கீழே விழுந்தன. அதை மறுஅட்டி வைத்து அடுக்கும்போது புகைப்படம் எடுத்த சிலர் அது மழை யில் நனைந்து விட்டதாக சுட்டிக்காட்டி யது தெரிய வந்தது.  

மழையினால் எவ்வித பாதிப்பும்  இல்லாமல் கருப்பு பாலிதீன் கவர் கொண்டு 64 அட்டிகளில் 6,933 மெட்ரிக் டன் நெல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் ஆய்வு செய்து நெல்  மூட்டைகளை பாதுகாக்கவும், நெல்  மூட்டைகளை அரவைக்கு துரிதமாக  அனுப்பவும், தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று  வருங்காலங்களில் நெல் மூட்டைகள் குறித்து புகார் மற்றும் செய்தி வராமல்  மழையில் இருந்து பாதுகாக்க மேற் கூரையிட்ட சேமிப்புக் கிடங்குகள் கட்டப் பட்டு வருகின்றன.  தஞ்சாவூரில் நடப்பு பருவத்தில் ஏடிடீ 51 சன்ன ரக நெல் விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரி கிறது. இவற்றை போக்க அண்டை மாவட்டங்களில் இருந்து இந்த சன்ன ரக நெல் விதைகளை கொண்டுவந்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தாண்டு இத்த கைய தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க,  கூடுதல் சன்ன ரக நெல் விதை  கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.  இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின் போது கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், தாசில்தார் தங்க.பிரபாகரன், வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் பிரி யாமாலினி உடனிருந்தனர்.