கரூர், மார்ச் 23 - கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள கட்டளையில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு நேரடியாக கொள் முதல் செய்து வருகிறது. ஆனால் இந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்த விவசாயிகளிட மிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு விவ சாயிகள் தங்களது நெல் மணிகளை ஆன்-லைன் மூலம் பதிவு செய்து, கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தார்ப்பாய் போட்டு மூடி வைத்திருந்த நெல்மணிகள் நனைந்து சேத மாகியுள்ளன. ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில் ஏற்பட்ட குளறு படிகள் காரணமாக பதிவு செய்து 20, 30 நாட்களுக்கு மேலாகியும் தங்களது நெல்லை கொள்முதல் செய் யாமல் அதிகாரிகளின் மெத்தன போக்குடன் செயல் படுகின்றனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய பணம் ஏதும் வழங்க வேண்டா மென கூறியிருந்த நிலை யில், மூட்டைக்கு ரூ.27 அதி காரிகள் கேட்கின்றனர். பெரு விவசாயிகள் பணம் தருவ தால் அவர்களது நெல்லை மட்டும் கொள்முதல் செய்துள் ளனர். சிறு, குறு விவசாயி களான எங்களது நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத் தால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளை விட்டுள் ளன. எனவே தமிழக அரசு ஆன்லைன் பதிவு செய்வதில் உள்ள குளறுபடிகளை நீக்கி கட்டளையில் சேமிப்புக் கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளனர். அதேபோல் கிருஷ்ண ராயபுரம் அருகே உள்ள கோவக்குளம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் மழை யால் நனைந்து சேதமடைந் துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் சொல் லொண்ணா துயரத்தில் உள்ளனர்.