tamilnadu

img

தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடுக! தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, மே 12- தூய்மை பணியாளர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளருக்கு அரசு அறிவித்த ரூ.50 லட்சம் வழங்கிட வேண்டும்.  தினக்கூலி ஒப்பந்த பணியாளருக்கு நாளொன்றுக்கு ரூ 600 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக திரு வாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே. முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சின்னையன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். தூய்மை பணியாளர்கள் பெருந்திர ளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற னர். நிறைவாக ஆர்.சுரேஷ் நன்றி கூறினார். மன்னார்குடியில் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. எம்.வினோத் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. ரெகுபதி, கே.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உரையாற்றி னார்கள்.

பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம்-சிஐடியு, பொன்னமராவதி பேரூராட்சி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் முன்பு கிளைத் தலைவர் என்.பக்ருதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து  தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஜியாவுதீன் சிறப்புரையாற்றினர். கிளை பொருளாளர் அய்யாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) துப்புரவு பணியாளர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட செயலா ளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவி வர்மன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா, சிபிஎம் நகரச் செயலாளர் தங்கராஜ், தமுஎகச-கவிபாலா, உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்க நகர செயலாளர் கணேசன் உள்ளிட் டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற னர்.
திருச்சிராப்பள்ளி 
சிஐடியு துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி மாவட்ட செயலா ளர் மாறன், சங்க பொறுப்பாளர் ராஜு, மாவட்ட பொருளாளர் விஜயன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் டோம்னிக், ரவி மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாக்கியராஜ், சாந்தி, மீனாட்சி, ராணி, எஸ்.எப்.ஐ மாவட்ட செயலா ளர் மோகன், ஆட்டோ சங்க மாநில துணைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.