திருச்சிராப்பள்ளி, மார்ச் 22- திருச்சி மாநகராட்சி தூய்மை பணியை ரூ.6289 லட்சத்திற்கு ஏலம் விடு வதன் மூலம் தனியார் முதலா ளிகள் லாபம் சம்பாதிக்க வழிவகுப்பதை கைவிட வேண்டும். மாநகராட்சி தூய்மைப் பணியை தனி யாருக்கு ஒப்பந்தம் விடும் அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தினக்கூலி தொழிலாளியை நிரந்தரப் படுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சிஐடியு சார்பில் செவ்வா யன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இளைய ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மாறன், மாவட்ட துணைத் தலைவர் டோம்னிக், சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேது பதி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன், வழக்க றிஞர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜன் உட்பட தூய்மை பணியா ளர்கள் கலந்து கொண்ட னர்.