districts

img

தூய்மைக் காவலர்களுக்கு சீருடை, உபகரணங்கள் வழங்க வேண்டும் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 6 - சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை  காவலர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில்  திங்கள்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சித் துறை  ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பழனி வேல் தலைமை வகித்தார். சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், மாவட்டச்  செயலாளர் பன்னீர்செல்வம், சிஐடியு மாவட்ட  குழு உறுப்பினர் அழகர்சாமி, பொருளாளர் சர வணன், மாநிலக் குழு உறுப்பினர் புஷ்ப ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 7-வது ஊதியக் குழு பரிந்துரை ஊதியமும் நிலுவைத் தொகையையும் உடனே வழங்க வேண்டும். தூய்மைப் பணி யாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீருடை உபகரணங்கள் வழங்க வேண்டும்.  ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு அர சாணைப்படி ரூ.50 ஆயிரம் பணிக்கொடை, ரூ.2000 ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறி வித்த 31 சதவீத அகவிலைப் படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.