tamilnadu

img

மன்னார்குடி  புத்தகத் திருவிழா அரங்கம்

 மன்னார்குடி, ஆக.13- மன்னார்குடி புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் பொது அரங்கம் மாலை 6.30 மணிக்கு எம்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. காந்திலெனின் வரவேற்றார். மாமலைவாசன், புகழேந்தி, ஆர்.கருணாநிதி, ரோட்டரி யன் என்.கோவிந்தராஜ் ஆகியோர் பேசினர். அகில இந்திய நாடக அமைப்பின் நிர்வாகியும், நாடகவியல் கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளருமான பேரா பார்த்திபராஜா நாடக உலகம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேரா பார்த்திபராஜா மன்னார்குடி கிருஷ்ணமூர்த்தி குழு வினரை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தார்.  பின்னர் கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் அரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் நடைபெற்றது. ஆர்.கே.பால குணசேகரன் நன்றி கூறினார். முன்னதாக குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.