குடவாசல், ஏப்.15- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். கீழவிடியல் கிராமத்தில் இருந்து சனிக்கிழமை காலைதுவங்கிய பிரச்சாரப் பயணம் தொடர்ந்து மேலவிடையல்,சித்தன்வாழர் உள்ளிட்ட 48 கிராம ஊராட்சி பஞ்சாயத்துக் களில் வேட்பாளர் எம்.செல்வராசு வாக்காளர்களை நேரில்சந்தித்து ஆதரவு திரட்டினார். அன்று இரவு வலங்கைமான் கடைவீதியில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், ஒன்றிய செயலாளர் என்.ராதா, மாவட்டக்குழு உறுப்பினர் கே.சுப்ரமணியன், நகரச் செயலாளர் சாமிநாதன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் அன்பரசன் (வடக்கு), தெட்சிணாமூர்த்தி (தெற்கு), சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார்உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பிரச்சாரப் பயணம் சென்ற இடமெல்லாம் வேட்பாளர் எம்.செல்வராசை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று வெற்றிமுத்திரை சின்னத்தை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.