tamilnadu

img

லாரி உரிமையாளர்கள் போராட்டம்: 5-வது நாளாக நீடிப்பு

திருவாரூர், மே 13-நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்லும் தனியார் லாரி உரிமையாளர்களின் போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.நெல்லை அரிசி ஆலைக்கும் அரவைக்குப் பின் ஆலையிலிருந்து கிடங்கிற்கும் அரிசியை எடுத்துச் செல்வதற்கான வாடகையை அரிசி ஆலை உரிமையாளர்கள் வழங்குவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தனியார் லாரிகளுக்கு வழங்க வேண்டிய வாடகையை வழங்க மறுப்பதுடன் தங்கள் சொந்த லாரிகளில் அரிசி மூட்டைகளை கொண்டு செல்வதாக கூறுகின்றனர் ஆலை உரிமையாளர்கள். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 9 ஆம் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தில் தனியார் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கோட்டாட்சியர் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ரேசன் கடைகளுக்கு அரிசி கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.