tamilnadu

img

கேன் குடிநீர் விலை ரூ.50 ஆக உயர்வு... உற்பத்தியாளர்கள் போராட்டம் 5 வது நாளாக நீடிப்பு

உற்பத்தியாளர்கள் போராட்டம் 5 வது நாளாக நீடிப்பு

சென்னை, மார்ச் 2- கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் 5வது நாளாக நீடித்து வரும் நிலையில் கேன் குடிநீர் விலை ரூ.50 ஆக உயர்வடைந்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் போரா ட்டம் 5வது நாளாக நீடித்து வருகிறது.  பல பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு, கேன் குடிநீர் விலை 50 ரூபாய் வரை உயர்ந்துள் ளது. தமிழகம் முழுவதும் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் இயங்கி  வரும் நிலையில், உயர்நீதிமன்ற உத்தர வுப்படி, சட்ட விரோத குடிநீர் ஆலை களுக்கு சீல் வைத்து, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, 13 சட்டவிரோத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் 57 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி பெறாத மொத்தம் 70 குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 125 குடிநீர் ஆலைகள் இயங்கி வந்த நிலையில் 55 நிறுவனங்கள் மட்டுமே, உரிமம்  பெற்று அவற்றை முறையாக புதுப்பித்த வை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வேலூர் எம்.பி. கதிர்  ஆனந்துக்கு சொந்தமான கேன் குடிநீர் ஆலைக்கு சீல்  வைக்கப்பட்டு உள்ளது.  அனுமதியின்றி குடிநீர் ஆலை செயல்பட்ட தாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை கடந்த 27ந் தேதி தொடங்கி நடத்தி வருகின்றனர்.  கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் 5வது நாளாக நீடித்து வருகிறது. போராட்டம் காரணமாக கேன் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்தது. கடைகளில் கேன் குடிநீர் ரூ.50 வரை விற்கப்படுகிறது