tamilnadu

img

வலங்கைமான் ஒன்றிய அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நவீன கழிவறை கட்ட நிதி ஒதுக்கீடு

குடவாசல், ஜூலை 11- வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள  ஆறு அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திற னாளி மாணவர்கள் பயன்படுத்தும் வகை யில், நவீன கழிவறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிக ளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்ப டுத்தும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய  புதிய கழிவறைகள் கட்டுதல் மற்றும் பரா மரித்தல் பணிகளுக்காக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆணைகள் வழ ங்கும் நிகழ்ச்சி வட்டார வள மையத்தில் நடை பெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜு தலைமையில் வட்டார கல்வி அலுவ லர் ஜெயலட்சுமி வலங்கைமான் வட்டா ரத்தில் உள்ள நல்லூர், கேத்தனூர், உத்தாணி, விளத்தூர் மற்றும் கடைத்தெரு, உத்தம தானபுரம் ஆகிய அரசுப் பள்ளிகளில் புதிய நவீன கழிவறைகள் கட்டுவதற்கு பள்ளி ஒன்று க்கு தலா ரூ.1.5 லட்சமும், அனைத்து பள்ளிக ளுக்கும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.50 ஆயிரமும் என மொத்தம் ரூ.2 லட்ச த்துக்கான காசோலையை பள்ளி தலைமை யாசிரியர்களிடம் வழங்கினார்.