திருவாரூர், மே 18- ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கையை தொடர்ந்து திருவாரூர் வட்டத்தை சேர்ந்த 65 நபர், மன்னார்குடி வட்டத்தை சேர்ந்த 7 நபர், திருத்துறைப்பூண்டி வட்டத்தை சேர்ந்த 9 நபர், வலங்கைமான் வட்டத்தை சேர்ந்த 16 நபர் என மொத்தம் 97 உத்தரப்பிர தேச மாநில தொழிலாளர்கள் திரு வாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தி லிருந்து சிறப்பு பேருந்து மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த உத்த ரப்பிரதேச மாநில தொழிலாளர்க ளை ஒருங்கிணைத்து இரவு 7 மணிக்கு இரயில் மூலம் உத்த ரப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.