tamilnadu

போதிய பேருந்து வசதி இல்லாததால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த மக்கள்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 24- தமிழகம் முழுவதும் 144 தடை உத்தர வால் திருச்சியில் இருந்து வெளி மாவட்டங் களுக்கு செல்லும் ஏராளமான பயணிகள், பேருந்து வசதி இல்லாமல்அவதிப்பட்டனர்.  தமிழகம் முழுவதும் செவ்வாய் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அம லுக்கு வந்ததுள்ளது. அதனால் திங்கள் முதல் செவ்வாய் காலை வரை சென்னை யில் இருந்து டவுன் பேருந்துகள் 800க்கும் மேற்பட்டவை திருச்சிக்கு திருப்பிவிடப் பட்டன. ஏற்கனவே ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், அனைவரும் பேருந்துகளையே பயன்படுத்தியதால், கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில், தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் பல ஆயிரம் பேர் திருச்சிக்கு வந்து இறங்கினர். ஆனால், திருச்சியில் இருந்து, தென் மாவட்டங் களுக்கு செல்வதற்கு போதுமான பேருந்து கள் இயக்கப்படவில்லை. அதனால், திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில், தங்கள் ஊர் களுக்கான பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். அதே சமயம், சென்னை யில் இருந்து வந்த பேருந்துகளில் செல்ல பயணிகள் இல்லாததால் இரவு முழுவதும் பஸ் ஸ்டாண்டிலேயே நிறுத்தி வைக்கப் பட்டு பின் அவை மீண்டும் சென்னைக்கே  காலியாக புறப்பட்டுச் சென்றன.