குடவாசல், மார்ச் 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டம் குட வாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடவாசல் ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி- கு.ராம தாஸ் இல்ல திருமண விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்கள் இரா.கோபாலன்- க.பிரியா கார்க்கி இணையர்களை வாழ்த்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெய பால் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் மணமக்களை வாழ்த்தி பேசி மணவிழா நடத்தி வைத்தார். அப்போது தில்லியில் அமைதியான முறையில் போரா ட்டம் நடத்திய இஸ்லாமிய மக் களை மத பிரிவினைவாதிகள் கொடூரமான ஆயுதங்களால் தாக்கி அப்பாவி மக்களை கொலை செய்தும், அவர்களின் சொத்துக் களை சூறையாடி சொந்த மண் ணிலேயே பாதிப்புக்குள்ளாக்கி னர். கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக நிவா ரண நிதி வழங்கிட மாநிலக்குழு அறைகூவல் விடுவிக்கப்பட் டதை அறிந்து மணமக்கள் தங்கள் சார்பாக மாநில மையத்திற்கு நிவாரண நிதியாக அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணனிடம் ரூ.2000 வழங்கி னர். தமிழக முற்போக்கு எழுத்தா ளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆத வன் தீட்சண்யா, தமிழ்நாடு பட்ட தாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பேராசிரியர் பூவை ஆர்.மனோ கரன், தஞ்சை மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம் வாழ்த் துரை வழங்கினர். மண விழா விற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்ட ஒன்றிய பொறுப் பாளர்கள், தோழமை சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.