கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை செய்த ஜி. இராமலிங்கம் திங்களன்று (ஆக. 17) காலமானார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க (சிஐடியு) நிர்வாகி எம்.ரவிக்குமார் தலைமையில் மாவட்டச் செயலா ளர் ஆர்.கணபதி, பொருளாளர் வி.சிங்காரவேலு, நிர்வாகிகள் கே.பழனி வேல், எஸ்.ரவி, கே.ராஜா, என்.குமரவேல், எஸ்.கருப்பையா, பி.முத்துவேல் ஆகியோர் அவரது குடும்பத்திற்கு 50,000 ரூபாய் நிதி வழங்கினர்.