tamilnadu

img

பயிர் இன்சூரன்ஸ் தொகை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, அக்.6- கஜா புயலால் பாதிக்க ப்பட்ட அனைத்து விவசாயி களுக்கும் பயிர் இன்சூர ன்ஸ் தொகையை விடுபடா மல் உடனே வழங்கிட வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் திருத்து றைப்பூண்டி வடக்கு ஒன்றி யம் சார்பில் மறியல் போரா ட்டம், ஆலத்தம்பாடி கடை த்தெருவில்  நடைபெற்றது.  போராட்டத்திற்கு விவ சாய சங்க மாவட்டச் செயலா ளர் வி.எஸ்.கலியபெருமாள் தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு ஜோதி பாசு, கே.என்.முருகா னந்தம், ஒன்றிய செயலா ளர் வி.டி.கதிரேசன், விவசா யத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எம்.முருகதாஸ், ஒன்றியத் தலை வர் சிவலிங்கம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்எஸ்.பாலகுரு, தலைவர் எஸ்.ராஜேந்திரன், சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் பி.ராமச்சந்திரன், எஸ்.முத்துக்குமாரசாமி, எஸ்.சேகர், பி.மாதவவேலன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.  தகவலறிந்து போ ராட்ட இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ராஜன்பாபு, வேளாண்மை துணை இயக்குனர் சாமிநாதன் உள்ளிட்டோர் விரைவாக பயிர் இன்சூரன்ஸ் தொ கையை பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.