tamilnadu

img

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

திருவாரூர், மார்ச் 10- திருவாரூர் ஆட்சியர் அலுவ லகம் முன்பாக அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கோரிக்கையை வலி யுறுத்தி தொடர் முழக்கப் போ ராட்டம் நடைபெற்றது. போராட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். கலைமணி தலைமை வைத்தார். செயலா ளர் ஆர்.குமாரராஜா, துணைத் தலைவர் பி.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில பொரு ளாளர் எஸ்.சங்கர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார். கோரிக்கை வெற்றி பெற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி ஆகி யோர் பேசினர். பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கோரிக் கையை வலியுறுத்தி தொடர் முழக்கமிட்டனர்.