சிதம்பரம், ஆக. 4- காட்டுமன்னார்குடி வட்டம் கண்டமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பயனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்காமல் 20 நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்க முடியும் என ஊராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதைக் கண்டித்தும், அனை வருக்கும் வேலை வழங்கக் கோரியும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலை வர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வட்ட துணைச் செயலாளர் குமார், சிபிஎம் கிளைச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து காட்டு மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி யில் உள்ள அனை வருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்துள்ளார்.