tamilnadu

காளைவிடும் விழாவில் சிறுவன் பலி

திருவண்ணாமலை,மார்ச்8- திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த கல்வாசல் கிராமத்தில் காளைவிடும் விழா நடத்தப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த காளை விடும் விழாவில் கலந்து கொண்டனர். காளைகளை உற்சாகப்படுத்த கூச்சலிட்டனர். அப்போது வேகமாக ஓடிவந்த ஒரு காளை முட்டியதில், கன்னிகாபுரம் நரிக்குறவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த, போத்தி என்பவர் மகன் விஜயகாந்த் (12) படுகாயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் விஜயகாந்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரி ழந்து விட்டதாக தெரிவித்தனர்.