districts

கழன்று ஓடிய லாரி சக்கரம் மோதி சிறுவன் பலி

கிருஷ்ணகிரி ஏப் 8- பர்கூர் சாலையில் அண்ணா நகர் பகுதியில் ஓடிய கனரக வாக னத்தில் முன் பக்க அச்சு முறிந்து இரு சங்கரங்களும் சாலையில் கழன்று  ஓடியது. அதில் ஒரு சக்கரம் அப்பகுதியில் நடந்து சென்ற கவியரசன் என்ற  பத்து வயது சிறுவன் மீது மோதியதில் சிறுவன் பலியானான். இது குறித்து  காவல்துறையினர் ஓட்டுநரை கைது செய்துவழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.