districts

பேருந்து மோதி சிறுவன் பலி

செங்கல்பட்டு, மார்ச் 29- செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் காந்திநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 39), இவரது மனைவி  பேபி (37), மகன் தருண் (7).  2-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் அனைவரும் பங்குனி உத்திர விழாவை யொட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வல்லக் கோட்டை முருகன் கோவி லுக்கு நடந்தே சாமி தரிச னம் செய்ய சென்றனர். இந்த  நிலையில், வண்டலூர்- வாலாஜாபாத் சாலை படப்பை அருகே உள்ள  காரணிதாங்கல் அருகே  நடந்து சென்று கொண்டி ருந்த போது, பின்னால் வந்த தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து பேபி மற்றும் தருண் மீது  மோதியது. இதில் இருவரும்  பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து ஒரகடம் போலீ சாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக படப் பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  அனுப்பி  வைத்தனர். அங்கு பரி சோதனை செய்த மருத்து வர்கள் சிறுவன் தருண் இறந்து விட்டதாக தெரி வித்தனர். காயமடைந்த பேபி செங்  கல்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார். மேலும் இந்த விபத்து  குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.