திருவண்ணாமலை, அக்.15- ஒரு கோடிக்கும் மேற்பட்ட நகர்புற, கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வடிகால்வாரியத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணியினை வாரிய, ஊழியர்களும், ஒப்பந்த உழியர்களும் செய்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்குவதாக, அறிவித்த ஊதியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேல்முருகன் தெருவிலுள்ள, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெ.கண்ணன் தலைமை தாங்கினார். எம்.பிரகாஷ், பி.கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.பாரி, சிஐடியு சங்கர், அரசு ஊழியர் சங்கம் கோ.ஸ்ரீதரன், செ.குப்புசாமி, கே.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.