tamilnadu

img

சட்டப்படியான இஎஸ்ஐ,பிஎப் வழங்கத் தவறினால் போராட்டம்.. .. குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் அமைப்பு அறிவிப்பு...

திருச்சிராப்பள்ளி:
சட்டப்படியான இஎஸ்ஐ,பிஎப் வழங்கத் தவறினால் மண்டல வாரியாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு அறிவித்துள்ளது.

சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமையன்று சிஐடியுதிருச்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில துணைத் தலைவர் மருதைராசு தலைமை தாங்கினார். சிஐடியு மாநில உதவித் தலைவர் சந்திரன், மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ஆத்மநாதன், பொருளாளர் அழகுமலை ஆகியோர் பேசினர். 

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒப்பந்த ஊழியர்களுக்கு செட்யூல் ஆப் ரேட் படி ஊதியத்தை வங்கியில்செலுத்த வேண்டும். ஊதியத்திற்கு ஏற்றாற்போல் சட்டப்படியான இஎஸ்ஐ, இபிஎப் வழங்க தவறும்பட்சத்தில் மண்டல வாரியாக காத்திருப்பு இயக்கம் நடத்துவது. தொகுப்பூதிய ஊழியர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, உடனடியாக ஊதிய மறுநிர்ணயம் செய்ய வேண்டும். பணியின் போது மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கும், பணியின்போது மரணமடைந்த ஊழியர்களுக்கும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பலன்களைஉடனுக்குடன் வழங்க வேண்டும். விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து சிஐடியு நடத்தும் இயக்கங்களில் பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.