கடலூர், ஆக. 6- குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதி யர்களுக்கு பணப்பலன்களை வழங்குவதையும், அகவிலைப்படி வழங்குவதையும் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய சங்கம் வலியுறுத்துள்ளது. சங்கத்தின் 17ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் கிளைத் தலைவர் ஜி.ஜெயச்சந்திரன் தலைமையில் கடலூரில் நடைபெற்றது. செயலா ளர் சி.தேவராஜ் வேலை அறிக்கையை யும், பொருளாளர் ஆர்.பாலமுருகன் வரவு அறிக்கையையும் சமர்ப்பித்த னர். அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் என்.காசிநாதன், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வு பெற்றோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, மாநிலப் பொருளாளர் எஸ்.ஜோதி வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் டி.சண்முகசுந்தரம், குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.மருதவாணன், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கங்களின் தலைவர் டி.புரு ஷோத்தமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொதுச் செயலாளர் என்.ராஜ்குமார் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக இணை செயலா ளர் எஸ்.சி.ராமலிங்கம் வரவேற்றார். துணைத் தலைவர் தனபால் நன்றி கூறினார். கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், 70 வயது நிரம்பியவர்களுக்கு அனை வருக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். புயல், வெள்ளம், சுனாமி, வறட்சி என்று தொடர் பாதிப்பை சந்திக்கும் கடலூர் மாவட்டத்தை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மருத்துவ செல வுகள், உதவியாளர்கள் கட்டணம், அறை வாடகை, நோய் கண்டறிதல் செலவுகள் மற்றும் நோயுடன் தொடர்புடைய உணவு செலவுகளை ஏற்று சிகிச்சை அளிக்க அரசு ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.