புதுக்கோட்டை, ஆக.19 - தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் புதுக்கோட்டை வட்டக் கிளை நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் து.தமிழரசன் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை முன்வைத்து வட்டச் செயலாளர் என்.ராமச்சந்திரன் பேசினார். கூட்டத்தில் மாவட் டத் தலைவர் மு.முத்தையா, செயலாளர் ம. வெள்ளைச்சாமி, பொருளாளர் கி.ஜெயபா லன், துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். புதுக்கோட்டையில் உள்ள டாக்டர் முத்து லெட்சுமி மருத்துவமனையை பொதுமக்க ளின் கோரிக்கைக்கிணங்க போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு 24 மணி நேரமும் இயங்கும் மருத்து வமனையாக செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு 1.1.2022 முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 3 விழுக்காடு அகவிலைப் படி உயர்வை 1.7.2022 முதல் வழங்குவதாக அறிவித்துள்ளது. கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியர் களுக்கு இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, 1.1.2022 முதல் அகவிலைப் படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும். ஒன்றிய அரசு வழங்குவது போல ஓய்வூதியர் களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மருத்துவப் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டப் பொருளாளர் மா.சம்பத் நன்றி கூறினார்.