திருச்சிராப்பள்ளி, ஜூலை 24- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்டக் கிளை முதல் மாநாடு செவ்வாயன்று திருச்சி மாவட் டம் மணப்பாறையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத்தலைவர் புரு ஷோத்தமன் தலைமை வகித்தார். வட்ட துணைத்தலைவர் குளத்துமணி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் புருஷோத்த மன் துவக்க உரையாற்றினார். செய லாளர் அறிக்கையை அழகுமணி வாசித்தார். வரவு- செலவு அறிக்கை யை செல்வராஜ் சமர்ப்பித்தார். மாநாட்டை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் பாக்யசெல்வன், டிஎன்ஜிபிஏ துறை யூர் கிளை முருகேசன், அய்யப்ப நகர் வட்டக்கிளை கல்யாணராமன், மாவட்ட செயலாளர் சந்தானமூர்த்தி, விஜயா ஆகியோர் பேசினர். மாநாட்டில் வட்ட துணைத்தலைவர்கள் துரைசாமி, ஆறுமுகம், வட்ட இணை செயலா ளர்கள் செல்லக்கண்ணு, மரிய தெரஸா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ரூ1000 வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.