கோவை,மே.15- கோவையில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த ஹரி ஸ்ரீ என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர்
ஏற்கனவே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியேயுள்ள ஹரி ஸ்ரீ மீண்டும் சட்ட விரோதாமாக துப்பாக்கி பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விசாரிக்க சென்ற போது ஹரி ஸ்ரீ போலீசாரை சுட முயன்றுள்ளார் இதனால் அவரை முழங்காலுக்குக் கீழே சுட்டு பிடித்து போலீசார் கை செய்துள்ளனர்.
மேலும் அவர் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருத்தல், கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கியைப் பயன்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது