விழுப்புரம், ஜூலை 3- நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார். விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் நகராட்சி பகுதிகளில், (02.07.2022) சனிக்கிழமை நகராட்சி நிர்வாகம் மூலம், மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ஊராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தில், கிராமப்பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆய்வு செய்தார். திண்டிவளம் நகராட்சியில், சலவாதி பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதையும், தீர்த்தகுளம் பகுதியில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், அரசு தலைமை மருத்துவமனை சாலை பகுதியில் இயந்திர துணை குழி மற்றும் கழிவு நீர் சேகரிப்பு குழாய் பதிக்கும் பணிகளையும், விநாயகா நகரில் கழிவுநீர் தூக்கி நிலையம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு, நகர் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள பாதான சாக்கடை திட்டம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். எனவே. இப்பணியினை திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் முடித்து நகராட்சியை தூய்மையாக பாதுகாத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், ஆவடையார்பட்டு ஊராட்சி மற்றும் மயிலம் ஊராட்சி ஒன்றியம் முப்புளி கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷார் திட்டத்தின் கீழ் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கிராபப்பகுதிகளில் வீடுகளுக்கு முழுமையாக குடிநீர் வழங்க தேவையான அளவு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டதுடன் மக்களின் தேவைக்கேற்ப குடிநீர் இணைப்புகள் வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.