திருவண்ணாமலை, ஜூன் 4-8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் செவ்வாயன்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.விவசாயிகளின் நலனுக்கு எதிராக உருவெடுத்துள்ள இந்த 8 வழிச் சாலை திட்டத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த தடை உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதி மன்றமும் அந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படும் 8 வழி சாலையை கொண்டு வர துடிக்கும் மத்திய, மாநில அரசை கண்டித்து செவ்வாய் அன்று, (ஜூன் 4) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.அபிராமன், நிர்வாகிகள், இல.அழகேசன், பிரகாஷ், அசோக், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் வி.சுப்பிரமணி, டி.கே.வெங்கடேசன், சிஐடியு நிர்வாகிகள் இரா.பாரி, எம்.வீரபத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.