விழுப்புரம், ஜூன் 21- விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் வடக்கு மாவட்ட வாலிபர் சங்கத்தின் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வட்டத் தலைவர் அருண்பிரசாத் தலைமை யில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடை பெற்றது. மாநில துணைத் தலைவர் கார்தீஸ்குமார், மாவட்டத் தலைவர் பிரகாஷ், செயலாளர் அறிவழகன், துணைத் தலை வர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆனால் காவல் துறையினர் அனுமதி யில்லை எனக் கூறி அனைவரையும் கைது செய்தனர். காவல் துறையின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் வாலிபர் சங்கத்தினர் மேலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடு களில் நோட்டீஸ் வழங்கினர்.